Tuesday, December 04, 2007

Star8. 3 ஜோக்ஸ் - 2 சைவம் 1 அசைவம்!

நண்பர்களே,

இதற்கு முன் ஒரு 7 சீரியஸான பதிவுகள் இட்டேன். எனவே, நீங்க கொஞ்சம் relax ஆகிக்க இந்த ஜாலிப் பதிவு :)

A ஜோக் படிக்க விரும்பாதவங்க, முதல் இரண்டை வாசித்து விட்டு அப்பீட் ஆகவும் ;-)

எனது மற்ற நட்சத்திர வாரப்பதிவுகளை இங்கு சென்று வாசிக்கவும்

விடைக்குத் தயாராகாமல் வினா எழுப்பாதே!

வழக்காடு மன்றத்தில் ஒரு வழக்கு நீதிபதி முன் வந்தது. ஒரு மூதாட்டி, சாட்சி கூண்டுக்கு அழைக்கப்பட்டார்.

வழக்கறிஞர், மூதாட்டியை நோக்கி, "திருமதி.மரகதம், என்னை உங்களுக்குத் தெரியும் தானே?"

மூதாட்டி, "உன்னைத் தெரியாமல் என்ன, பிரகாஷ் ? சின்ன வயதிலிருந்தே உன்னைத் தெரியும், ஆனால் சிலாக்கியமாக ஒன்றுமில்லை! நீ பொய் சொல்கிறாய், மனைவியை ஏமாற்றுகிறாய், பிறரை உபயோகப்படுத்திக் கொண்ட பின் அவர்களை தூற்றுகிறாய், உன்னை பெரிய மேதாவி என்று நினைத்துக் கொண்டிருக்கிறாய்! ஆகவே, உன்னை எனக்கு மிக நன்றாகவேத் தெரியும்!" என்றார்.

மூதாட்டியின் பதிலில் வழக்கறிஞர் ஆடிப்போய் விட்டார்! எப்படி வழக்கைத் தொடர்வது என்று புரியாத குழப்பத்தில், அவர் எதிர்தரப்பு வக்கீலை சுட்டிக் காட்டி, "திருமதி.மரகதம், இவரை உங்களுக்குத் தெரியுமா?" என்று வினவினார்!

அதற்கு அம்மூதாட்டி,"ஏன், ரமேஷை பல வருடங்களாக எனக்குத் தெரியும்! அவன் ஒரு சோம்பேறி, நல்லது சொன்னால் கேட்க மாட்டான், நிறைய குடிப்பான். அவனுக்கு யாரிடமும் நல்லுறவு கிடையாது. சட்டத்தை பற்றி ஒரு எழவும் தெரியாமல், வக்கீலாகி விட்டவன்! அவனுக்கு மூன்று பெண்களிடம் தொடர்பு இருக்கிறது. அதில் ஒருத்தி உன் மனைவி!?!" என்று கூறியதில் ரமேஷ் என்ற அந்த எதிர்தரப்பு வக்கீல் மூர்ச்சையாகும் நிலைக்கு போய் விட்டார்!

அவசர அவசரமாக, இரண்டு வழக்கறிஞர்களையும் தன்னருகே வருமாறு அழைத்த நீதிபதி, மெல்லிய குரலில், "உங்கள் இருவரில் எந்த ராஸ்கலாவது அந்த கிழவியிடம் 'என்னைத் தெரியுமா' என்று கேட்டால் நிச்சயம் அந்த ஆளை தூக்கு மேடைக்கே அனுப்பி விடுவேன்!" என்றார் :)
************************************

குடி குடியைக் கெடுக்காது!

ஒரு கணவர் கூறுகிறார்:

முந்தைய நாள் அதிகம் குடித்ததால், பயங்கரத் தலைவலியுடன் ஒரு நாள் காலை கண் விழித்தேன். படுக்கைக்கு அருகே, 2 ஆஸ்பிரின் மாத்திரைகளும், குளிர்ந்த நீரும் வைக்கப்பட்டிருப்பதைப் பார்த்து ஆச்சரியம் அடைந்தேன்! அத்துடன், சலவை செய்யப்பட்ட எனது மாற்றுத் துணிகள் டேபிளில் இருப்பதையும் கண்டேன்! எனது அறையும் ஒழுங்காக்கப்பட்டு மிக சுத்தமாக இருந்தது! மொத்த வீடுமே படு சுத்தமாக இருந்தது!

மாத்திரைகளை விழுங்கும்போது, டேபிளில் ஒரு குறிப்பைப் பார்த்தேன்: "டார்லிங், உங்கள் காலை உணவு அடுப்பின் மேல் சூடாகவே இருக்கும், சாப்பிடுங்கள், நான் ஷாப்பிங் செல்கிறேன், ஐ லவ் யூ"

சமையலறைக்குச் சென்றால், என் மனைவியின் குறிப்பு சொன்னது போலவே, சூடான காலை உணவோடு, பத்திரிகையும் தயாராகவே இருந்தது.

என் மகன் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். என் மகனைப் பார்த்து, "நேற்று இரவு என்ன தான் நடந்தது?" என்று வினவினேன்.

என் மகன், "அப்பா, நீங்கள் அதிகாலை 3 மணிக்கு மிக அதிகமான போதையில் வீட்டுக்கு வந்தீர்கள், நாற்காலியை உடைத்தீர்கள், கூடத்திலேயே வாந்தி எடுத்தீர்கள், தடுமாறி கதவின் மீது மோதி நெற்றியில் அடிபட்டுக் கொண்டீர்கள்!" என்றான்.

குழப்பத்தின் உச்சத்துக்குச் சென்ற நான், "பின் எப்படி வீடே அலம்பி விட்டது போல சுத்தமாகவும், என் காலை உணவு தயாராகவும் உள்ளது ? நியாயமாக, என்னுடன் பெரிய சச்சரவுக்கு அல்லவா உன் அம்மா தயாராக இருந்திருக்க வேண்டும் ?" என்றேன்.

என் மகன் அமைதியாக, "அப்பா, நேற்றிரவு அம்மா உங்களை தரதரவென்று படுக்கையறைக்கு அழைத்துச் சென்று, உங்கள் உடைகளையும், காலணிகளையும் களைந்தபோது, நீங்கள், 'விடு என்னை, நான் திருமணமானவன், என் மனைவியை மிகவும் நேசிப்பவன்' என்றீர்கள்" என்றான் !!!!!!!!
*****************************

மன்மத மருத்துவம்!

ஒரு மனைவி ஒரு ஹிப்னாடிஸ்ட் வகை மருத்துவ நிபுணரிடம் சென்று விட்டுத் திரும்பிய பின் தன் கனவனிடம் கூறுகிறாள்: இவ்வளவு வருடங்களாக என்னை வாட்டிய ஒற்றைத் தலைவலி பிரச்சினை தீர்ந்தது!
கணவன்: எப்படி அந்த அதிசயம் ?
மனைவி: என் தோழி ஒருத்தி பரிந்துரைத்த ஹிப்னாடிஸ்ட் மருத்துவ நிபுணரிடம் இரண்டு மாதங்களுக்கு முன் சென்றேன். அவர் ஒரு தீர்வு கூறினார், அதாவது, தினமும் இரு முறை கண்ணாடி முன் நின்று, "எனக்குத் தலைவலி இல்லை" என்று தொடர்ந்து 5 நிமிடங்கள் சொல்லுமாறு அந்த நிபுணர் கூறினார். என் தலைவலி போயே போயிந்தி!
கணவன்: சரி தான், பெரிய ஆள் தான் அந்த ஹிப்னாடிக் டாக்டர்!
மனைவி: நீங்கள் கூட இப்போதெல்லாம் படுக்கையில் சீக்கிரமே சோர்ந்து விடுகிறீர்கள் ?!? நீங்களும் ஒரு முறை சென்று அந்த ஹிப்னாடிஸ்ட்டை பார்க்கலாமே ?

கணவனும், மனைவி சொன்னதற்காக, அந்த ஹிப்னாடிஸ்ட்டை சந்தித்து விட்டு வந்தார்! வீட்டுக்கு வந்த கணமே, மனைவியை படுக்கை அறைக்கு தூக்கிச் சென்று கிடத்தி விட்டு, "இரு, இதோ வந்து விடுகிறேன்" என்று சொல்லி விட்டு, பாத்ரூமுக்குச் சென்று சில நிமிடங்களில் திரும்பியவர் மனைவிக்கு வரலாறு காணா இன்பம் (சிற்றின்பம் தாங்க:)) வழங்கினார்!!! மனைவியோ "ஐயோ, என்னவொரு மாற்றம் ?" என்று சந்தோஷத்தில் திக்குமுக்காடிப் போய் விட்டார்!

கணவர் மறுபடியும் "இரு, இதோ வந்து விடுகிறேன்" என்று சொல்லி விட்டு, பாத்ரூமுக்குச் சென்று சில நிமிடங்களில் திரும்பி வந்து, இரண்டாவது ரவுண்டை முதலாவதை விட சிறப்பாக ஆடினார் :) மனைவிக்கோ தலை கிறுகிறுத்து விட்டது!

கணவர் மறுபடியும் "இரு, இதோ வந்து விடுகிறேன்" என்று சொல்லி விட்டு, பாத்ரூமுக்குச் சென்றார்! கணவருக்குத் தெரியாமல் அவரை மெதுவாக பின்தொடர்ந்து மனைவி பாத்ரூமுக்குச் சென்று பார்த்தார். அங்கே கணவர் கண்ணாடி முன் நின்றபடி கூறிக் கொண்டிருந்தார்:
"அவள் என் மனைவியில்லை, அவள் என் மனைவியில்லை, அவள் என் மனைவியில்லை!"
***********************************

என்ன மக்களே, என்சாய் பண்ணீங்களா :)))))))))))))

எ.அ.பாலா

22 மறுமொழிகள்:

enRenRum-anbudan.BALA said...

Test :)

மங்களூர் சிவா said...

ஜூப்பர் மூனாவது!!

said...

2 engayo kathaya patitha niyabagam.. mathapadi super..

Boston Bala said...

நன்றாக இருந்துச்சு ;)

Boston Bala said...

முதல் ஜோக் நீதிமன்ற அவமதிப்பு என்று சொல்லப்படலாம் ;)

வடுவூர் குமார் said...

:-))))))
செஸ் படிச்சிட்டு வந்தா.. இங்கு பூந்து விளையாடி இருக்கீங்க.

வடுவூர் குமார் said...

ஒரே சிரிப்ப்ப்ப்ப்ப்பு தாங்க முடியலை.
கொஞ்ச நேரம் முன்பு பாத் ரூம் போக வேண்டியிருந்தது.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

அசைவ ஜோக்கை முதலில் போடாமல் சைவத்தை முன்னிறுத்திய பாலாவை மிக மிக வன்மையாகக் கண்டிக்கிறோம்! :-))))

said...

ஹாஹா! மூணாவது அசத்தல் :D

SP.VR. SUBBIAH said...

ஒன்றும், மூன்றாவதும் நன்றாக இருக்கிறது மிஸ்டர் பாலா!

அட்டே நீங்களும் ஜெஃபரி ஆர்ச்சரின் ரசிகரா!

அவ்ருடைய சிறுகதைகள் தொகுப்பான'Twist in the Tale" படித்திருக்கிறீர்களா?

அந்தக் கதைகளின் இயல்பான மொழிபெயர்ப்பு(உபயம்.திரு.ரா.கி.ரங்கராஜன்)
பல வருடங்களுக்கு முன்பு குமுதத்தில் வந்தது. அவைகளும் சூப்பராக இருக்கும் படித்திருக்கிறீர்களா?

குசும்பன் said...

சவைவம் , அசைவம் எல்லாமே சூப்பர்!!!

புரட்சி தமிழன் said...

அசைவம் சைவம் இதுக்கும் வெஜ் நான் வெஜ் இதுக்கும் உள்ள வித்தியாசம் என்னாவா இருக்கும் ஒரு எடுத்துக்காட்டு சொல்லமுடியுமா

enRenRum-anbudan.BALA said...

மங்களூர் சிவா, வெட்டி, பாஸ்டன் சார், குமார், கண்ணபிரான், முதல்வன், குசும்பன்,
புரட்சி தமிழன்,
என்சாய் பண்ணினதுக்கு நன்றி ;)

பாஸ்டன் சார், கண்ணபிரான்,
உங்களுக்கு ரொம்பத் தான் குசும்பு :)

சுப்பையா Sir,
வாங்க, Twist in the Tale படிக்காம விடுவேனா ?

தாங்கள் "Not a penny more not a penny less" வாசித்து இருக்கிறீர்களா ?

அருமையான Fiction !

எ.அ.பாலா

Nimal said...

மூணுமே சூப்பர்...
மூணாவது சூப்பரோ சூப்பர்...!
;)

நக்கீரன் said...

சூப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பருங்கோ.....!

சீனு said...

1, 2 ஏற்கனவே படித்திருக்கிறேன். மூன்றும் நன்று.

said...

Anaithu jokkugalum superungo...

enRenRum-anbudan.BALA said...

nimal, nakkIran, seenu, siva,

nanRi :)

enRenRum-anbudan.BALA said...

nimal, nakkIran, seenu, siva,

என்சாய் பண்ணினதுக்கு நன்றி ;)

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

மூணுமே அருமை.

enRenRum-anbudan.BALA said...

//
சாமான்யன் Siva said...
மூணுமே அருமை.
//
nanRi :)

தங்ஸ் said...

ஒண்ணும், மூணும் சூப்பர்..நேபாளி ஜோக்ஸ்-னு நெறய இந்த மாதிரி வரும். அதுல எதுவும் இருந்தா போடுங்க பாஸ்..

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails